சுடச்சுட

    

    ராமேசுவரம் திருக்கோயில் கொடிமரத்துக்கு இன்று பாலாலயம்

    By ராமேசுவரம்  |   Published on : 11th July 2016 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் திருக்கோயிலில் அம்மன் சன்னதி முன்பு புதிய கொடிமரம் அமைக்கப்பட உள்ளதால், ஏற்கெனவே உள்ள பழமையான சேதமடைந்த கொடிமரத்தை அகற்றுவதற்காக திங்கள்கிழமை பாலாலயம் நடைபெறுகிறது.

      ராமேசுவரம் திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா ஜூலை மாத இறுதியில் தொடங்குகிறது. திருக்கோயிலில் 17 நாள்கள் நடைபெறும் இந்த ஆடித் திருவிழாவையொட்டி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்பாக அமைந்துள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறும்.

      இந்நிலையில், பழமையான இந்த கொடிமரம் சேதமடைந்துள்ளதால், இதை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் அமைக்க திருக்கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. அதன்பேரில், பக்தர் உபயத்தில் புதிய கொடிமரம் வாங்கப்பட்டு திருக்கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

      எனவே, பழமையான கொடிமரத்தை அகற்றுவதற்கு திங்கள்கிழமை காலை அம்மன் சன்னதி முன்பு பாலாலயம் நிகழ்ச்சி நடைபெறகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai