Enable Javscript for better performance
கும்பாபிஷேக விழாவில் 7 பெண்களிடம் 53 பவுன் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கும்பாபிஷேக விழாவில் 7 பெண்களிடம் 53 பவுன் நகை திருட்டு

    By பரமக்குடி  |   Published on : 12th July 2016 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் திருக்கோயில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 7 பெண்களிடம் 53 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

     பரமக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நகர் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பரமக்குடி சென்குப்தா தெருவைச் சேர்ந்த பரசுராமன் மனைவி சகுந்தலா அணிந்திருந்த 15 பவுன் சங்கிலி, அம்பலகாரத் தெருவைச் சேர்ந்த சரவணன் மனைவி வனிதாவிடமிருந்து 5 பவுன் நகை, மீனாட்சி நகரைச் சேர்ந்த முத்துக்குமார் மனைவி முனியக்காவிடமிருந்து 7 பவுன் நகை, வைகை நகரைச் சேர்ந்த கணபதி மனைவி லீலாவதியிடமிருந்து 5 பவுன் நகை, அதே பகுதியைச் சேர்ந்த கேசவராமன் மனைவி காந்திமதியிடமிருந்து 8 பவுன் நகை, மூவேந்தர் நகரைச் சேர்ந்த வல்லத்தரசு மனைவி சந்திரகாந்தியிடமிருந்து 8 பவுன் நகை, எல்லைப்புர காந்திஜி சாலையைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி வைரம்பாள் என்பவரிடமிருந்து 5 பவுன் நகை என மொத்தம் 7 பேரிடம் இருந்து 53 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.  இதுகுறித்து பரமக்குடி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai