Enable Javscript for better performance
தவறான சிகிச்சையால் கட்டைவிரல் பாதிப்பு: ஆட்சியரிடம் சிறுவன் புகார்- Dinamani

சுடச்சுட

    

    தவறான சிகிச்சையால் கட்டைவிரல் பாதிப்பு: ஆட்சியரிடம் சிறுவன் புகார்

    By ராமநாதபுரம்  |   Published on : 12th July 2016 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தவறான சிகிச்சையாளர் இடதுகை கட்டை விரல் கெட்டுப் போய் விட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி முதுகுளத்தூரை சேர்ந்த 14 வயது சிறுவன் ஆட்சியரிடம் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்துள்ளார்.

       முதுகுளத்தூர் சுவாமிகள் மடத்தெருவில் வசிக்கும் கிருஷ்ணன், பாக்கியம் தம்பதியரின் மகன் வெங்கடேஸ்வரன்(14). தந்தை கிருஷ்ணன் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.

     கடந்த 27.3.2016 ஆம் தேதி தந்தைக்கு உதவியாக இவர் கடையில் இளநீர் வெட்டிய போது இடது கை பெருவிரல் துண்டானதாம்.  முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால், மருத்துவ உதவியாளர்கள் இருவர் சிகிச்சையளித்தனராம். .

       இந்நிலையில் இடதுகை கட்டைவிரல் அழுகி ரத்த ஓட்டமும் தடைப்பட்டது. இதையடுத்து மதுரையில் தனியார் மருத்துவமனையில் கட்டை விரல் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாம்.

    இதற்கு காரணமான முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வெங்கடேஸ்வரன் ஆட்சியரிடம் மனு அளித்தார். சிறுவனுடன் தாயார் பாக்கியமும் வந்திருந்தார். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் அச்சிறுவனிடம் உறுதியளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai