Enable Javscript for better performance
பரமக்குடி கூட்டுறவு வங்கியில் பெட்டக வசதி அமைக்கும் பணி- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடி கூட்டுறவு வங்கியில் பெட்டக வசதி அமைக்கும் பணி

    By பரமக்குடி  |   Published on : 12th July 2016 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடி கூட்டுறவு நகர வங்கியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் பெட்டக வசதி அமைப்பதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

    வங்கியின் வாடிக்கையாளர்கள் தமது தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை பாதுகாக்க பெட்டக வசதி செய்து தரக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை நிறைவேற்றும் விதமாக ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் பெட்டக வசதி ஏற்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு வங்கியின் தலைவர் அ.வடிவேல்முருகன் தலைமை வகித்தார். துணைப்பதிவாளர் சென்பகராஜ், மேலாண்மை இயக்குநர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமேலாளர் பாண்டி வரவேற்றார்.

     சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் எஸ்.முத்தையா, மாவட்ட அதிமுக செயலர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் பூமி பூஜையை தொடக்கி வைத்தனர். இதில் வங்கி நிர்வாகிகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கிளை மேலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai