சுடச்சுட

    

    பரமக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் திருக்கோயிலில் கும்பாபிஷேகம்

    By பரமக்குடி  |   Published on : 12th July 2016 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் திருக்கோயில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

     பரமக்குடி ஆயிரவைசியர்களுக்கு புராதனப் பாத்தியமான ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா ஜூலை 6-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, கணபதி ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகளுடன் தொடங்கியது. 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு பிரசன்ன அபிஷேகம் நடைபெற்று, 9.00 மணிக்கு வைகை ஆற்றிலிருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, வீதிஉலா வந்து யாக சாலையை அடைந்தன.

    மாலை 4.30 மணியளவில் முதல் கால யாகபூஜையுடன் துவங்கி, மறுநாள் சனிக்கிழமை காலை, மாலையில் 2-ஆம், 3-ம் கால யாகசாலை பூஜைகளும், சுவாமி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தனம் என்னும் மருந்து சாற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூலை 10-ம் தேதி காலை மாலை வேலைகளில் 4-ம், 5-ம் கால யாக பூஜைகள் நிறைவடந்தன.

    இதனைத் தொடர்ந்து ஜூலை 11-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு 6-ஆம் கால யாகபூஜையும், பரிவார பூர்ணஹூதியும், காலை 5.15 மணிக்கு முதல் பரிவார மூர்த்திகள், விமானங்களுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. 7.15 மணிக்கு பிரதான மஹாபூர்ணாஹூதி, யாத்ராதானம் முடிவடைந்து மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகியது. பிரதான விமானம், ராஜகோபுரத்தில் காலை 9.30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சியை சர்வசாதகம் மா.சிவகுமார் குருக்கள், மா.பாஸ்கர குருக்கள் அடங்கிய சிவாச்சாரியார்கள் நடத்தினர். விழாவில் அறநிலையத்துறை அதிகாரிகள், நகர் முக்கிய பிரமுகர்கள், ஆயிரவைசிய சமுக மக்கள், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புதுச்சேரி வாழ் பெருமக்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    விழா ஏற்பாட்டினை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் மற்றும் ஸ்ரீ முத்தாலம்மன் தேவஸ்தானம் பரம்பரை டிரஸ்டிகள் மு.வ.பா. ஜெயராமன், வா.ரவீந்திரன், நிர்வாக அறங்காவலர் சோ.பாலசுப்பிரமணியன், கும்பாபிஷேக ஒருங்கிணைப்பாளர் கோ.சு.ரெங்கராஜன் மற்றும் ஆயிரவைசிய சபை தலைவர் ஏ.ஆர்.சுப்பிரமணியன், செயலாளர் பா.ஜெகநாதன், முன்னாள் தலைவர் எஸ்.பாலுச்சாமி, பொருளாளர் எல்.சேகர், துணைத் தலைவர்கள் என்.பிரகாசம், எஸ்.ராமன் செட்டியார் உள்ளிட்ட சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai