சுடச்சுட

    

    ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் முப்பெரும் விழா

    By ராமநாதபுரம்  |   Published on : 12th July 2016 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் மருத்துவர் தின விழா, கல்வி எழுச்சி நாள் விழா, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    அரவிந்த அரங்கத்தில் கலைவாணி குழுவினரின் இறைவாழ்த்துடன் விழா தொடங்கியது. இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் டாக்டர்.தி.அரவிந்தராஜ் தலைமை வகித்தார். ஷிபான் மருத்துவமனையின் மருத்துவர்கள் ஐ.மன்சூர், நூருல்ஹவ்வா மன்சூர், தமிழ்ச் சங்க துணைத் தலைவர்கள் வைகிங்.எம். எஸ்.கருணாநிதி, குழ.விவேகானந்தன், பொருளாளர் க.மங்களசுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மை.அப்துல்சலாம் வரவேற்று பேசினார்.

    சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் பரணிக்குமார் மருத்துவர் தின விழாவை அறிமுகம் செய்து பேசினார்.

    டாக்டர் ஆர்.குலசேகரன் கம்பனில் இருசொல் என்ற தலைப்பிலும், தமிழே மருந்து என்ற தலைப்பில் கண் மருத்துவர் பொ.சந்திரசேகரனும் பேசினர். டாக்டர் ஜோசப்ராஜன் வானகம் இங்கு என்ற தலைப்பிலும், டாக்டர் சகுபர்சாதிக் இன்பம் எங்கே,இன்பம் எங்கே என்ற தலைப்பிலும் பேசினர்.

    இதயம், மூளை, கண், குழந்தை வளர்ப்பு, நீரழிவு நோய் தொடர்பான பார்வையாளர்களின் கேள்விகளுக்கு மருத்துவர்கள் பதிலளித்தனர்.

    முன்னதாக ஷிபான் நூர்குளோபல் அகாதெமி பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி, ஜனனி பரணிக்குமார், விகாஸ் அண்ணாமலை, அனுலின் ரோசியா, ஆர்யா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

    12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு டாக்டர் இப்ராகிம் நினைவு தமிழ்ச்சங்கப் பரிசும், பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஆசியா நினைவுத் தமிழ்ச்சங்க பரிசும், தமிழில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஹபிபுல்லாகான் நினைவு தமிழ்ச்சங்கப் பரிசும் வழங்கப்பட்டன. விழாவில் பாடகர் வாசு, ஆசிரியர்கள் தேவி.உலகராஜ், காளீஸ்வரி சுகுமார், கவிஞர் மாணிக்கவாசகம், ஆசிரியை தமிழரசி உதயகுமார் உள்பட தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai