Enable Javscript for better performance
ராமேசுவரத்தில் மேலும் 3 புதிய பேட்டரி கார்கள்- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரத்தில் மேலும் 3 புதிய பேட்டரி கார்கள்

    By ராமேசுவரம்  |   Published on : 12th July 2016 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம்  ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ. 25 லட்சம் மதிப்பில் 3 புதிய பேட்டரி கார்களை திருக்கோயில் நிர்வாகம் திங்கள்கிழமை வாங்கியுள்ளது.

    ராமேசுவரம் திருக்கோயில் பாதுகாப்புக் கருதி கீழரத வீதி, மேற்கு, வடக்கு வாசல்கள், சன்னதித் தெரு மற்றும் அக்னி தீர்த்தம் கடல் பகுதிகளில் வாகனங்கள் செல்வற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தரிசனத்துக்கு வரும் குழந்தைகள், பெண்கள், வயதானோர் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து பக்தர்கள் வசதிக்காக ராமேசுவரம் நகராட்சி சார்பில்  2 பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. அது போதுமானதாக இல்லாததால் வெயில் காலங்களில் பக்தர்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் திருக்கோயில் சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்பில் 3 பேட்டரி கார்கள் வாங்கப்பட்டுள்ளன. தலா 8 பேர் செல்லும் வகையில் உள்ள இந்த கார்களை இயக்குவதற்கு ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகு பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai