சுடச்சுட

    

    ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

    By ராமேசுவரம்  |   Published on : 12th July 2016 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் திங்கள்கிழமை தொடங்கினர்.

    தமிழக பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 73 பேரையும், இலங்கைக் கடற்படை வசமுள்ள தமிழக மீனவர்களின் 108 படகுகளையும் விடுவித்தல், இலங்கை கடல் பகுதியில் மூழ்கி சேதமடைந்த 18 படகுகளுக்கு நிவாரணம், இறால் மீன்களுக்கு அரசே விலை நிர்ணயிக்கக் கோருவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். முன்னதாக துறைமுகப் பகுதியிலுள்ள மீன்துறை அலுவலகம் முன்பு மீனவர்கள் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    சிறைக்காவல் நீட்டிப்பு: பாம்பன் பகுதியிலிருந்து ஜூலை 2 ஆம் தேதி நாட்டுப்படகில்   தங்கு கடல்  மீன்பிடிக்க சென்ற விஜய், டொனால்ட், வினோத், அகிலன், கவிஸ்டன், நெட்னோ ஆகிய 6 மீனவர்களை ஜூலை 4 ஆம் தேதி  இலங்கை கடற்படையினர்  கைது செய்தனர்.

     புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர்களை  ஜூலை 11 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. காவல் முடிந்ததையடுத்து 6 மீனவர்களையும் போலீஸார் திங்கள்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  அப்போது வரும் 25-ஆம் தேதி வரை மீனவர்களுக்கான சிறைக்காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 6 மீனவர்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai