Enable Javscript for better performance
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது- Dinamani

சுடச்சுட

    

    பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் ஏ.புனவாசல் பிர்கா கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார். இவரிடம்  சிறுகுடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரத்தினவேல்பாண்டியன் பட்டா மாறுதல் செய்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு வி.ஏ.ஓ ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் பட்டா மாறுதல் செய்ய முடியும் எனக் கூறினாராம். இதையடுத்து ரத்தினவேல் பாண்டியன் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் தெரிவித்தார். அவர்கள் ரத்தினவேல்பாண்டியனிடம் ரசாயனம் தடவிய ரூ.3ஆயிரம் பணத்தை கொடுத்தனுப்பினர். ஏ.புனவாசல் வி.ஏ.ஓ. அலுவலகத்தில் வைத்து அந்தப் பணத்தை செந்தில்குமாரிடம் ரத்தினவேல் பாண்டியன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துணைக் கண்காணிப்பாளர் மதியழகன், ஆய்வாளர் ஜானகி ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai