சுடச்சுட

    

    வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் காப்பு கட்டுதல்

    By முதுகுளத்தூர்  |   Published on : 12th July 2016 03:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுகுளத்தூர் ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

      முதுகுளத்தூர், எம்.தூரி, செல்வநாயகபுரம் ஆகிய ஊர்களுக்கு பாத்தியப்பட்ட கிராமத்தின் காவல் தெய்வமான ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் 40-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா தொடங்கியது. முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை, இரவு 8 மணிக்கு கோயிலின் முன்பு இருக்கும் கொடி மரத்தில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

       நிகழ்ச்சிக்கு விழாக்குழு கௌரவத் தலைவர் எஸ்.பாலகுருசாமி தலைமை வகித்தார். தலைவர் எஸ்.வடமலையான், செயலாளர் கு.அழகர்சாமி, பொருளாளர் கே.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

             மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்களுக்கு பூசாரி வெங்கடேசன் காப்பு கட்டினார். விழாவைத் தொடர்ந்து அன்னதானமும், நகர் வர்த்தக சங்கச் செயலாளர் எஸ்.முத்துராமலிங்கம் தலைமையில் ஆன்மிக இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai