சுடச்சுட

    

    அச்சங்குளம் நூற்பாலையில் தினமும் ரூ. 8 லட்சத்துக்கு உற்பத்தி: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

    By ராமநாதபுரம்  |   Published on : 13th July 2016 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அச்சங்குளம் கிராமத்தில் இயங்கி வரும் கூட்டுறவு நூற்பாலையின் தினசரி உற்பத்தி மதிப்பு ரூ.8 லட்சம் என தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

      அச்சங்குளத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நூற்பாலையை அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

     பின்னர் அமைச்சர் கூறியது: அச்சங்குளம் கூட்டுறவு நூற்பாலையை நவீனமயமாக்க ரூ.28 கோடியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆலை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள 50 பெண்கள் உள்பட மொத்தம் 193 ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பயனடைந்துள்ளனர். இந்த நூற்பாலையானது தினசரி ரூ.8 லட்சம் மதிப்பில் உற்பத்தி செய்து வருகிறது.

      இந்த நிதியாண்டில் ரூ.22.97 கோடிக்கு உற்பத்தி செய்துள்ளது. மேலும் 1.4.2016 முதல் 30.6.2016 வரை மொத்தம் 3.71 லட்சம் கிலோ உற்பத்தி செய்துள்ளது. இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.2 கோடி லாபம் ஈட்டியுள்ளது. பல்வேறு நிர்வாக காரணங்களால் நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த நூற்பாலை நவீனமயமாக்கப்பட்டு தற்போது லாபத்தில் இயங்கி வருகிறது என்றார்.

         ஆய்வின் போது, பரமக்குடி எம்.எல்.ஏ.எஸ்.முத்தையா,மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு.சுந்தரபாண்டியன், பரமக்குடி நகர்மன்ற உறுப்பினர் எம்.ஏ.முனியசாமி,கூட்டுறவு நூற்பாலையின் மேலாண்மை இயக்குநர் ந.செல்வன் ஆகியோர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai