சுடச்சுட

  

  இருசக்கர வாகனங்கள் மோதல்: பள்ளி மாணவர் சாவு

  By ராமநாதபுரம்  |   Published on : 13th July 2016 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் பட்டினம்காத்தான் ஆதம் நகர் விலக்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

     ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் மைதீன். இவரது மகன் ஷாரூக்கான்(16). இவர் தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் பட்டினம் காத்தான் பகுதியில் டியூஷன் முடித்து விட்டு, வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார். ஆதம் நகர் பகுதியில் வந்தபோது எதிரில் வந்து கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் ஷாருக்கான் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக கேணிக்கரை காவல் ஆய்வாளர் சீனிவாசகன் வழக்குப்பதிவு செய்து மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர்களை தேடி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai