ஜூலை 18இல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
By ராமநாதபுரம் | Published on : 13th July 2016 07:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ராமநாதபுரத்தில் ஜூலை 18ஆம் தேதி சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறியிருப்பது: மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர் தலைமைவகிக்கிறார்.
இக்கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.