சுடச்சுட

  

  பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கோரிக்கை

  By பரமக்குடி  |   Published on : 13th July 2016 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் பேரவை கூட்டத்தில், கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் பேரவையின் ஆலோசனை மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் அதன் தலைவர் மு.சரவணன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் எஸ்.செந்தில்வேல், பொருளாளர் மெ.பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர்கள் ஏ.சீதா, டி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் வே.திருமுருகன் வரவேற்றார்.

    கூட்டத்தில், கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு சம உரிமை, சமவாய்ப்பு மற்றும் பணிப் பாதுகாப்பு உறுதி செய்ய அரசை வலியுறுத்துவது எனவும், ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நலன் மற்றும் வளர்ச்சியில் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை நவீன காலத்திற்கு ஏற்ப செயல்படுத்த கோருவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சங்க அலோசகர் ஏ.எல்.தனலெட்சுமி நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai