சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் வழக்குரைஞர்கள் மனிதச் சங்கிலி

    By ராமநாதபுரம்  |   Published on : 13th July 2016 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வழக்குரைஞர்களுக்கான புதிய சட்டத் திருத்தத்தைக் கண்டித்து ராமநாதபுரம் சாலைத் தெருவில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.

      சென்னை உயர்நீதிமன்றம் வழக்குரைஞர்களுக்காக கொண்டு வந்துள்ள புதிய சட்டத் திருத்தத்தை கண்டித்து மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

      போராட்டத்துக்கு ராமநாதபுரம் வழக்குரைஞர் சங்கத் தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சங்க செயலாலர் சலீம் முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

       இதில், மூத்த வழக்குரைஞர்கள் முத்துராமன்,ரவிச்சந்திரராமவன்னி, தனசேகரன், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai