சுடச்சுட

    

    பரமக்குடி பாராதியார் நடுநிலைப் பள்ளியில் திருக்குறிப்புத் தொண்டர் சமூகப் பேரவை சார்பில், அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அச்சமூக மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் எம். சீனிவாசன் தலைமை வகித்தார். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அச்சமூக மாணவர்கள் ஜெ. நாகநந்தினி, டி. கெளதம், பி. கருணாகரன் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற என். தாரணி, என். காமேஸ்வரன், டி. திவ்யபாரதி ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai