சுடச்சுட

    

    ஊராட்சி அலுவலகத்தை கிராமத்தினர் முற்றுகை

    By முதுகுளத்தூர்  |   Published on : 14th July 2016 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மண்டலமாணிக்கம் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை பார்த்தவர்களுக்கு ஊதியம் வழங்காததால், புதன்கிழமை கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இக்கிராம மக்களுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லையாம். இது குறித்து பலமுறை கமுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உடனடியாக சம்பளம் வழங்கக் கோரி, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரராகவன், ராஜேந்திரன் மற்றும் போலீஸார், வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கிராம மக்களிடம் விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்க எடுப்பதாக சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில், கிராம மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai