சுடச்சுட

  

  பங்கு வர்த்தக கணக்கில் ரூ.7 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு

  By ராமநாதபுரம்,  |   Published on : 14th July 2016 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரத்தில் பங்கு வர்த்தகத்தில் ஒருவரது கணக்கிலிருந்து அவருக்குத் தெரியாமலேயே ரூ. 7 லட்சத்தை மற்றொருவரின் கணக்குக்கு மாற்றி மோசடி செய்த 4 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  ராமநாதபுரம் காயக்காரி அம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் ராகவன் மகன் பாஸ்கரன். இவரது பங்கு வர்த்தகம் தொடர்பான (டிமேட்) வங்கிக் கணக்கில் இருந்த 7,73,160 ரூபாயை, ராமநாதபுரத்தில் வசிக்கும் கஜேந்திரன் என்பவரது வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு, கஜேந்திரனின் நணபர்களான சரவணன், வசந்தகுமார், சூரியமூர்த்தி ஆகிய 3 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த 4 பேர் மீதும் பாஸ்கரன் மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் இவர்கள் மீது மோசடி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai