சுடச்சுட

    

    பள்ளிக்குள் புகுந்து வெறிநாய் கடித்ததில் 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

    By ராமநாதபுரம்,  |   Published on : 14th July 2016 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா சிக்கல் அருகேயுள்ள காவாகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்குள் புதன்கிழமை வெறிநாய் புகுந்து மாணவி மற்றும் இரு மாணவர்களை கடித்ததால், அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காவாகுளம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்குள் திடீரென வெறிநாய் புகுந்து, அங்கு 3 ஆம் வகுப்பு படிக்கும் அஸ்வின் (8), 4 ஆம் வகுப்பு படித்து வரும் வினோத்குமார் (9) மற்றும் ஷர்மிளா (8) ஆகிய 3 பேரையும் கடித்தது. இதில் காயம் அடைந்த 3 பேரையும், ஆசிரியர்கள் உடனடியாக மேலக்கிடாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இவர்களை, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இது குறித்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர் சேக் அப்துல்லா கூறுகையில், மாணவர்கள் இருவருக்கு தலையிலும், மாணவிக்கு கையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மூவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai