சுடச்சுட

    

    பாம்பன் சாலைப் பாலத்தில் அரசு பேருந்து மோதி சிறுவன் சாவு

    By ராமேசுவரம்  |   Published on : 14th July 2016 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாம்பன் சாலைப் பாலத்தில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

    ராமேசுவரம் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் தனது உறவினர்களுடன் தனியார் பேருந்தில் செவ்வாய்க்கிழமை இரவு வந்துள்ளார். சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு, புதன்கிழமை ஊருக்குத் திரும்பியபோது, பாம்பன் பாலத்தை பார்ப்பதற்காக பேருந்தை நிறுத்தியுள்ளனர். பேருந்திலிருந்து அனைவரும் இறங்கி பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் செல்வதை பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

    அச்சமயம், ஈஸ்வரன் மகன் அஸ்வின் (8) என்ற சிறுவன் பேருந்தை விட்டு கீழே இறங்கி சாலையை கடக்க முயன்றுள்ளான். அப்போது, ராமேசுவரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து சிறுவன் மீது மோதியது. இதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாம்பன் போலீஸார், அஸ்வின் உடலைக் கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநர் அன்பழகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai