சுடச்சுட

  

  மதுரையில் இளைஞர் கொலை வழக்கு: ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஒருவர் சரண்

  By ராமநாதபுரம்,  |   Published on : 14th July 2016 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை அருகே வாடிப்பட்டியில் இளைஞர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி, ராமநாதபுரம் 2 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.

  மதுரை கோ.புதூர் பகுதியில் மண்மலை மேடு தெருவில் வசித்து வந்தவர் ஸ்ரீதர் (25). இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த குமார் மகன் சந்திரன் (27) என்பவருக்குச் சொந்தமான சண்டைச் சேவலை ஸ்ரீதர் திருடி எடுத்துச் சென்றது தொடர்பாக, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சந்திரனும்,அவரது நண்பரான நந்தகுமார் என்பவரும் சேர்ந்து ஸ்ரீதரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். மதுரை அருகே வாடிப்பட்டி மாதா கோயில் பின்புறம் கடந்த 11.7.2016 இல் நடந்த இக்கொலைச் சம்பவம் தொடர்பாக, வாடிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வந்தனர். இதனிடையே, முக்கியக் குற்றவாளியான மதுரையைச் சேர்ந்த சந்திரன் ராமநாதபுரம் 2 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கண்ணன் முன்பு சரணடைந்தார். சந்திரனை விசாரித்த நீதிபதி, ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை மதுரை மத்திய சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, சந்திரன் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai