சுடச்சுட

    

    முதுகுளத்தூர் ஸ்ரீவடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் 2008 திருவிளக்குப் பூஜை

    By முதுகுளத்தூர்,  |   Published on : 14th July 2016 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுகுளத்தூர் ஸ்ரீவடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் புதன்கிழமை மாலை 2008 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

    முதுகுளத்தூர், எம்.தூரி, செல்வநாயகபுரம் ஆகிய கிராமத்தினர் வணங்கிவரும் ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் 40 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, 2008 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. இதையொட்டி, பால், மஞ்சள், இளநீர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் அம்மனுக்கு நடத்தப்பட்டன. பின்னர், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக முதுகுளத்தூர் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், அக்கினிச் சட்டி ஏந்தவும், அலகு குத்தவும், பூக்குழி இறங்குவதற்கும், பால்குடம் எடுப்பதற்கும் மாலை அணிவித்து விரதமிருந்து வருகின்றனர்.

    விழாவை முன்னிட்டு, தினமும் இரவில் அம்மன் பஜனை பாடல்கள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள், ஆன்மிகச் சொற்பொழிவுகள், மாணவ,மாணவியரின் மழலையர் பட்டிமன்றம், நாடகம், பொது அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சியில், கௌரவத் தலைவர் எஸ். பாலகுருசாமி தலைமை வகித்தார். தலைவர் எஸ். வடமலையான், செயலர் கு. அழகர்சாமி, பொருளாளர் கே. பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை, கே.ஆர். தமிழ்ச்செல்வம், முத்துலெட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai