சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    By ராமநாதபுரம்  |   Published on : 14th July 2016 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ராமநாதபுரம் சந்தைத் திடலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் முகம்மது இஸ்ஹாத் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அப்பாஸ் அலி ஆலிம், நகர் தலைவர் அஜ்மல் ஷெரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் மாநிலப் பேச்சாளர் அப்துல்ஜமீல், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பஷீர்அலி ஆகியோர் பேசினர்.

    இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர் ஜாஹீர் நாயக் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரது பிரசாரத்தை முடக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசின் 2 ஆண்டு கால மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நிறைவாக, கட்சியின் மேற்கு மாவட்டப் பொதுச் செயலர் அஸ்கர் அலி நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai