சுடச்சுட

  

  ராமநாதபுரத்தில் தொடரும் மின்தடை:பொதுமக்கள் புகார்

  By ராமநாதபுரம்,  |   Published on : 14th July 2016 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் நகராட்சியில் 15 ஆவது வார்டு பகுதியான கான்சாகிப் தெருவில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. தினசரி அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

  இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே, பொதுமக்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக, அப்பகுதி குடியிருப்போர் நலச் சங்க துணைத் தலைவர் எஸ்.முஹம்மது இஸாத்தீன் புதன்கிழமை தெரிவித்தார்.

  இது தொடர்பாக, மின்வாரியப் பொறியாளர் ஒருவர் கூறுகையில், ராமநாதபுரத்தில் நகர் முழுவதும் நவீன மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.விரைவில் இப்பிரச்னை சரிசெய்யப்பட்டுவிடும் என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai