சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் ரூ.22 லட்சம் மோசடி:சென்னை தொழிலதிபர் கைது

    By ராமநாதபுரம்,  |   Published on : 14th July 2016 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரத்தில் ஒருவரிடம் ரூ. 22 லட்சம் கடனாகப் பெற்றுக் கொண்டு திருப்பித் தராமல் மோசடி செய்த சென்னைத் தொழிலதிபரை, புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

    ராமநாதபுரம் சிவஞானபுரம் பகுதியில் வசிக்கும் நயினாமுகம்மது மகன் என்.எஸ். அசன்அலியார். இவரிடமிருந்து, சென்னை மூர் தெருவைச் சேர்ந்த அமானுல்லா மரைக்காயர் (61) மற்றும் இவரது மகன் பைசு மரைக்காயர் ஆகிய இருவரும் தொழில் வளர்ச்சிக்காக ரூ. 25 லட்சம் பெற்றுக்கொண்டு, அதை ரூ. 30 லட்சமாக திருப்பித் தருவதாகக் கூறியுள்ளனர். கடந்த 24.6.2013 ஆம் தேதி பெற்ற இத்தொகைக்கு ரூ. 8 லட்சம் மட்டும் திருப்பித் தந்துள்ளனர். மீதமுள்ள ரூ. 22 லட்சத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

    இந்த மோசடி குறித்து, என்.எஸ். அசன்அலியார் ராமநாதபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து சென்னை தொழிலதிபரான அமானுல்லா மரைக்காயரை கைது செய்தனர். தலைமறைவாகவுள்ள அவரது மகன் பைசு மரைக்காயரை தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai