சுடச்சுட

    

    ராமேசுவரம் திருக்கோயிலில் புதிய கொடிமரம் அமைக்கும் பணிகள் தீவிரம்

    By ராமேசுவரம்,  |   Published on : 14th July 2016 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித் திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, அம்மன் சன்னதி முன்பாக புதிய கொடிமரத்தை நிறுவுவதற்கு கோயில் நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ராமேசுவரம் திருக்கோயிலில் அம்மன் சன்னதி முன்பாக இருந்த தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரம் 44 ஆண்டுகள் பழமையானது.

    இந்த கொடிமரம் சேதமடைந்ததால், அதை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் அமைப்பதற்கு கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, 40 அடி உயரத்துக்கு புதிய தேக்கு மரத்தாலான கொடிமரம் கோயில் நிர்வாகத்திடம் பக்தர் உபயமாக வழங்கினார்.

    அதையடுத்து, பழமையான அந்த கொடிமரத்துக்கு திங்கள்கிழமை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு அகற்றப்பட்டது.

    திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் நடைபெறும் ஆடித் திருக்கல்யாண நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் தொடங்கும். இதற்காக, அம்மன் சன்னதி முன்பாக புதிய கொடிமரத்தை நிறுவும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதன்கிழமை, புதிய கொடிமரத்தை செதுக்கும் பணி நடைபெற்றது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai