Enable Javscript for better performance
அப்துல்கலாம் சமாதிக்கு கூடுதல் நிலம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை: நிலத்தை பார்வையிட்டு ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அப்துல்கலாம் சமாதிக்கு கூடுதல் நிலம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை: நிலத்தை பார்வையிட்டு ஆட்சியர் ஆய்வு

    By ராமேசுவரம்  |   Published on : 15th July 2016 04:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அப்துல்கலாம் சாமதி அமைந்துள்ள வளாகத்தில் கண்காட்சி உள்ளிட்ட பணிகளுக்காக மத்திய அரசு, கூடுதல் நிலம் கேட்டதையடுத்து அங்கு வியாழக்கிழமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

     ராமேசுவரம் அருகே பேக்கரும்பு பகுதியில் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சமாதி அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் கலாமின் வாழ்க்கை வரலாறு, அவரது சாதனைகள் குறித்த கண்காட்சி மற்றும் அறிவுசார் மையம் உள்பட பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

     இதையடுத்து, இத்திட்டங்களுக்கு சமாதியை சுற்றியுள்ள நிலம் போதாது என்பதால் மத்திய அரசு, தமிழக அரசிடம் கூடுதல் நிலம் கேட்டுள்ளது. இதன் பேரில் சமாதியை சுற்றியுள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களையும், தனியாருக்கு சொந்தமான நிலங்கைளையும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் பார்வையிட்டார்.

     அதன் பின் ராமேசுவரம் சர்வே பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இடங்களின் வரைபடங்களை அவர் ஆய்வு செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai