சுடச்சுட

    

    அரசுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

    By ராமநாதபுரம்  |   Published on : 15th July 2016 04:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு ரொக்கப்பரிசும், நினைவுப்பரிசும் பள்ளியின் முன்னாள் மாணவர் அமைப்பின் சார்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

      விழாவுக்கு, செய்யது அம்மாள் அறக்கட்டளை செயலர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்துப் பேசினார். முன்னாள் மாணவர்கள் சிவக்குமார், சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் காஜாமைதீன் வரவேற்றார்.

     பள்ளியின் முன்னாள் மாணவரும், மத்திய கலால்துறை இணை ஆணையருமானசெந்தில்வேலன் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசும், நினைவுப் பரிசும் வழங்கி பேசினார். பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் ஜாகீர்ஹூசேன் நன்றி கூறினார்.

     சுவாமி விவேகானந்தர் அறக்கட்டளை செயலர் சுதாகர் உள்ளிட்ட பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai