சுடச்சுட

    

    முதுகுளத்தூர் ஸ்ரீசுப்பிரமணியர் கோயிலுக்குள் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் குழுவின் மகா சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

     கூட்டத்துக்கு குருநாதர் எஸ்.பாலகுருசாமி தலைமை வகித்தார். குருநாதர் அ.திருமாள், பொருளாளர் முருகானந்தம், துணைத் தலைவர் குருசாமி, துணைச் செயலர் ஜீவன் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     கூட்டத்தில், தமிழ் மாதம் முதல் தேதியில் ஜயப்ப பக்தர்கள் குழு சார்பில் பொது அன்னதானமும், ஒவ்வொரு ஆங்கில மாதம் 29 ஆம் தேதி அன்று மாதாந்திர கூட்டமும், ஐயப்பன் கோயிலின் முன்பு கொடி மரம் அமைப்பது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பாண்டி, மாஸ்டர் சண்முகம், சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணைப் பொருளாளர் முனியசாமி நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai