சுடச்சுட

  

  கீழக்கரையில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

  By ராமநாதபுரம்  |   Published on : 15th July 2016 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கீழக்கரை முகம்மதுசதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருநாள் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் அக்கல்லூரியின் புதிய கருத்தரங்க கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

   தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம், மடீசியா மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பு ஆகியன இணைந்து இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு இந்த விழிப்புணர்வு முகாமை நடத்தின.

   முகாமுக்கு கல்லூரி முதல்வர் அ.அலாவுதீன் தலைமை வகித்தார். மடீசியா அமைப்பின் தலைவர் எல்.முராரி, கௌரவச் செயலர் கே.பி.முருகன், முன்னோடி வங்கி மேலாளர் சுரேஷ்பாபு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் சியாமளாகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமப்புற தொழில் வாய்ப்புகள் குறித்து மத்திய கடல்வள மீன் ஆராய்ச்சி நிலைய மண்டபம் பிரிவின் தலைவர் பி.ஜான்சன், பயிற்சியாளர் ஆர்.ராஜ்குமார், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் மாரியம்மாள் ஆகியோர் பயிற்சியளித்தனர். முகாமில் 110 மாணவர்கள் பங்கேற்றனர்.

   இதில், கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் எஸ்.மரியதாஸ், கனடா- இந்திய கூட்டுப் பயிலகத் திட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஐ.கமால்அப்துல் நாசர் ஆகியோர் உள்பட கல்லூரியின் அனைத்துத் துறை பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர் அ.சேக்தாவூது செய்திருந்தார். ஜி.அயூப்கான் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai