சுடச்சுட

  

  பசும்பொன் தேவர் நினைவிடத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் மரியாதை

  By முதுகுளத்தூர்  |   Published on : 15th July 2016 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கமுதி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு வியாழக்கிழமை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

   பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் கடந்த 10 ஆண்டுகளாக பசும்பொன்னுக்கு வந்து அவரது நினைவிடத்தில் உள்ள உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறேன்.

   இது எனது மனதுக்கு நிம்மதி தருகிறது. ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட தேவரை வணங்கி சென்றால் நினைத்த காரியங்கள் வெற்றியடைகின்றன என்றார்.

   அப்போது அவருடன் பாஜக மாநில துணைத் தலைவர் சுரேந்திரன், மாவட்ட பிரசார அணித் தலைவர் முனியசாமி, மாவட்ட விவசாய அணித் தலைவர் கணபதி, சிவகங்கை மாவட்ட முன்னாள் தலைவர் ராஜேந்திரன், கமுதி ஒன்றிய தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் இருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai