சுடச்சுட

    

    பரமக்குடி அருகே விதிமுறையை மீறி செம்மண் அள்ளிய 30 லாரிகள் பறிமுதல்

    By பரமக்குடி  |   Published on : 15th July 2016 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வியாழக்கிழமை செம்மண் குவாரியில் விதிமுறையை மீறி மண் அள்ளிய 30 டிப்பர் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    பரமக்குடி அருகே சூடியூரில் உள்ள செம்மண் குவாரியில் ஒரு மீட்டர் ஆழத்தில் காலை 6.00 முதல் மாலை 6.00 மணி வரை மண் அள்ளிக் கொள்வதற்கு காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கைவாசல் கிராமத்தைச் சேர்ந்த எம்.கே. தவமணி என்பவர் அரசிடம் அனுமதி பெற்றுள்ளார். இதில் அவர் அரசு விதிமுறைகளை மீறி முறைகேடாக மண் எடுப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.

     இந்நிலையில் பரமக்குடி வட்டாட்சியர் எஸ். செய்யதுமுகம்மது, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அந்த குவாரிக்கு வியாழக்கிழமை சென்று விசாரணை நடத்தினார்.  அப்போது அங்கிருந்தவர்கள் அவர் மீது லாரியை ஏற்றிக் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

     உடனே அவர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீஸாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.  அதனைத் தொடர்ந்து அங்கு முறைகேடாக மண் அள்ள பயன்படுத்திய 30 டிப்பர் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்து பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு கொண்டு சென்றனர்.

     இதுகுறித்து பார்த்திபனூர் காவல் நிலையத்தில் சூடியூர் கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai