சுடச்சுட

    

    ராமேசுவரம் விடுதியில் ஆந்திர பக்தர் தற்கொலை

    By ராமேசுவரம்  |   Published on : 15th July 2016 04:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் பகுதியிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆந்திர மாநில பக்தர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

     ஆந்திரா மாநிலம் சித்தூர் சந்தைப்பேட்டையை சேர்ந்த சந்திரசேகர் மகன் நீலநாரயணன் (58). புதன்கிழமை ராமேசுவரம் வந்த அவர் தனியார் தங்கும் விடுதியில் தனி அறை எடுத்து தங்கியுள்ளார். வியாழக்கிழமை காலையில் நீண்ட நேரம் அறைக்கதவு திறக்கப்படாமல் இருந்ததால், கதவை உடைத்து பணியாளர்கள் பார்த்தனர். அறையில் குளிக்கும் அறையில் உள்ள தண்ணீர் குழாயில் அவர் தூக்கிட்டு இறந்திருப்பது தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. ராமேசுவரம் கோயில் போலீஸார் உடலைக் கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசசோதணைக்கு அனுப்பி வைத்தனர்.

     மேலும் இது குறிக்கு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai