சுடச்சுட

  

  அரசுகளைக் கண்டித்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

  By முதுகுளத்தூர்  |   Published on : 16th July 2016 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், முதுகுளத்தூர் பேருந்து நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

     ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் தமுமுக சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மேற்கு மாவட்டச் செயலர் பாகிர் அலி தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் எஸ். முகம்மது, மாவட்ட நிர்வாகிகள் இக்பால், எம். சம்சுதீன், வாவா ராவுத்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     இதில், முஸ்லிம் மத நல்லிணக்கப் பேச்சாளரான டாக்டர் ஜாகீர் நாயக் மீது  பொய்யான குற்றச்சாட்டைக் கூறி, அவரைக் கைது செய்ய நினைக்கும் மத்திய அரசையும், இதற்கு உறுதுணையாக உள்ள மகாராஷ்டிர மாநில அரசையும் கண்டித்து  இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    இதில், கடலூர் தலைமைக் கழகப் பேச்சாளர் எஸ். மன்சூர் சிறப்புரையாற்றினார். தமுமுக நகர, ஒன்றிய நிர்வாகிகள், பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், நகர் கழகச் செயலர் ஜபருல்லாகான் நன்றி தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai