சுடச்சுட

  

  ராமநாதபுரம் அருகேயுள்ள ஆர்.காவனூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில், காமராஜரின் 114 ஆவது பிறந்த நாளை கல்வி எழுச்சி நாளாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

     விழாவுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை நா. சாரதா தலைமை வகித்தார். காமராஜர் இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் மா. சித்ரவேலு முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியை து. சங்கரி வரவேற்றார். தொழிலதிபர்கள் சுப்பிரமணியன், முகம்மது சலாகுதீன் ஆகியோர் காமராஜர் கல்விக்கும், மக்களுக்கும் செய்த தொண்டு என்ற தலைப்பில் பேசினர்.

     இதில், கிராம மக்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் என அனைவரும் காமராஜரின் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

    பள்ளி மாணவர்களும் காமராஜரைப் பற்றி உரையாற்றினர். பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பாடநோட்டுகள் உள்ளிட்டவற்றை கிராமத் தலைவர் கருப்பையா வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியை சோ. மரகதம் செய்திருந்தார். ஆசிரியை மு. வெண்ணிலா சபரி ஜோதி நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai