சுடச்சுட

    

    இலங்கை கடற்படையினரால் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 4 பேர் கைது

    By ராமேசுவரம்  |   Published on : 16th July 2016 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 4 பேரை, இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

       ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த ராபின்சன் தனது நாட்டுப்படகில் பாக்கியம், கரன்ராஜ், டார்சன் ஆகியோருடன் சேர்ந்து வியாழக்கிழமை கடலுக்குச் சென்றுள்ளார்.  இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, வெள்ளிக்கிழமை அதிகாலை அப்பகுதியில் ரோந்த வந்த இலங்கைக் கடற்படையினர் 4 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு, மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக போலீஸார் வழக்குப் பதிந்து, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  அங்கு மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி, இம்மாதம் 21 ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், 4 மீனவர்களையும் போலீஸார் வவுனியா சிறையில் அடைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai