சுடச்சுட

    

    இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 5 பேருக்கு சிறைக்காவல் நீட்டிப்பு

    By ராமேசுவரம்  |   Published on : 16th July 2016 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 5 பேருக்கு சிறைக் காவலை ஜூலை 21 ஆம் தேதி வரை நீட்டித்து, அந்நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.  

       ராமேசுவரம் பகுதியிலிருந்து ஜூலை 2 ஆம் தேதி நம்புரெத்தினம் என்பவருக்குச் சொந்தமான படகில் கணேஷ், மாரிமுத்து, தனம், வேலாயுதம், சாரதி ஆகிய 5  மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.    எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறி, 5 மீனவர்களையும் ஜூலை 15 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

     அதன்படி, மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

      அதையடுத்து, வெள்ளிக்கிழமை மீண்டும் 5 மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ஜூலை 21 ஆம் தேதி வரை மீனவர்களுக்கு சிறைக் காவலை நீட்டித்து நீதிபதி சபேஷ்வரன் உத்தரவிட்டார். அதையடுத்து, 5 மீனவர்களையும் போலீஸார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai