சுடச்சுட

    

    கீழக்கரையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

    By ராமநாதபுரம்  |   Published on : 16th July 2016 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

       கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியும் இணைந்து நடத்திய இக்கருத்தரங்குக்கு செய்யது ஹமீதா கல்லூரியின் முதல்வர் இ. ரஜபுதீன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் எஸ். முஹம்மது ஜஹாபர், நாட்டு நலப்பணித் திட்ட அலுவர்கள் என். மீராமுகைதீன், பூபாலன், சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      செஞ்சுருள் சங்க அலுவலர் எம். ஆனந்த் வரவேற்றுப் பேசினார். ராமநாதபுரம் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு டி.எஸ்.பி. ஜி.ஆர். அரசு, மனோதத்துவ டாக்டர் எஸ். முகம்மது ரபீக், உணவு பாதுகாப்புத் துறை உதவி நியமன அலுவலர்கள் கருணாநிதி, மோகன்ராஜ் ஆகியோர் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகளை விளக்கினர்.

      இதில், கல்லூரி மாணவர்கள் 700-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ராஜமாணிக்கம், எஸ்தர் கண்மணி ஆகியோர் செய்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai