Enable Javscript for better performance
திருவாடானை பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா

    By திருவாடானை  |   Published on : 16th July 2016 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை பகுதியில் உள்ள பள்ளிகளில் காமராஜரின் 114 ஆவது பிறந்நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

       தினைகாத்தான்வயல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியர் லதா தலைமையில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், உதவி ஆசிரியர் தனலெட்சுமி, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் செல்லக்கண்ணு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.   தினைகாத்தான்வயல் அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் ரெங்கசாமி தலைமையிலும், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் வடிவேல் முன்னிலையிலும் கொண்டாடப்பட்டது.    தொண்டி கிழக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் தலைமையிலும், பேரூராட்சித் தலைவர் சேகுநெய்னா முன்னிலையிலும் காமராஜர் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.    நம்புதாளை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளியில்  ஊராட்சி மன்றத் தலைவர் சத்தியசீலன் தலைமையிலும், பள்ளித் தலைமை ஆசிரியர் முனியாண்டி, துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, துணை தலைவர் செய்யது யூசுப் ஆகியோர் முன்னிலையிலும் கொண்டாடப்பட்டது.   ஆதியாகுடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், தலைமை ஆசிரியர் கதிரவன் தலைமையிலும், உதவி ஆசிரியர் சர்மிளாபானு, பெற்றோர்-ஆசிரிய கழகத் தலைவர் கதிரேசன் முன்னிலையிலும் காமராஜர் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

      திருவாடானை சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், தலைமை ஆசிரியர் மச்சவள்ளி தலைமையில், காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai