Enable Javscript for better performance
நியாய விலைக் கடை புதிய கட்டடம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரம் தாலுகாவுக்கு உள்பட்ட பாம்பன் தெற்குவாடி பகுதியில்  நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

      திறப்பு விழாவுக்கு, பாம்பன் ஊராட்சிமன்றத் தலைவர் பேட்ரிக் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்டக் கூட்டுறவு சார்-பதிவாளர் தொல்காப்பியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், ராமேசுவரம் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் உமாமகேஸ்வரி குத்துவிளக்கேற்றி கட்டடத்தை திறந்து வைத்தார்.  இதில், ராமேசுவரம் ராம்கோ சூப்பர் மார்க்கெட் பொறுப்பாளர் வேடராஜன், பணியாளர்கள் சந்திரசேகர், மலைராஜ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai