சுடச்சுட

    

    மண்டபம் பகுதியில் மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்

    By ராமேசுவரம்  |   Published on : 16th July 2016 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் சிறப்பு முகாம் நடத்த வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

      மண்டபம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், உதவித் தொகை, அடையாள அட்டை, கண் கண்ணாடி, மூன்று சக்கர மிதிவண்டி மற்றும் சிறுதொழில் நடத்துவதற்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்குதல் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு அரசு சலுகைகளைப் பெறுவதற்கு சிறப்பு முகாம் நடத்த வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க மாநிலப் பொதுச் செயலர் நம்புராஜன் தலைமையில், ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர்.

      இது குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு, ராமநாதபுரம் வட்டாட்சியர் மாரி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல், ராமேசுவரம்  டி.எஸ்.பி. முத்துராமலிங்கம் ஆகியோர் விரைந்தனர். பின்னர், மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க மாநிலப் பொதுச் செயலர் நம்புராஜன், சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் நஜூபுதீன், சங்கத்தின் மண்டபம் ஒன்றியச் செயலர் ஹரிசுதன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

      அதில், மண்டபம் பகுதியில் சிறப்பு முகாம் விரைவில் நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில், மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடும் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai