Enable Javscript for better performance
மரங்களை வெட்டிய 6 பேர் மீது வழக்கு: 4 பேர் கைது; தலையாரி பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மரங்களை வெட்டிய 6 பேர் மீது வழக்கு: 4 பேர் கைது; தலையாரி பணியிடை நீக்கம்

    By முதுகுளத்தூர்  |   Published on : 16th July 2016 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான   6 புளியமரங்களை வெட்டிய 6 பேர் மீது வெள்ளிக்கிழமை போலீஸார் வழக்குப் பதிந்து, அதில் 4 பேரை கைது செய்தனர்.

       ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், கீழத்தூவல் கிராமத்தில் 6 புளிய மரங்களை வெட்டியதாக, செல்வநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிழவன் மகன் முத்துச்சாமி, மேலத்தூவல் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் ராமலிங்கம், காளிமுத்து மகன் குமரையா, பச்சம்மாள் மகன் சேதுராமன், ராமச்சந்திரன் மகன் சண்முகவேல், சந்தானம் மகன் முத்து ஆகிய 6 பேர் மீது கிராம நிர்வாக அலுவலர் கமலநாதன் அளித்த புகாரின்பேரில், கீழத்தூவல் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் வழக்குப்  பதிவு செய்தார். இவர்களில், முத்துச்சாமி, குமரையா, சேதுராமன், சண்முகவேல் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், மரங்களை வெட்டி விற்பனை செய்து வைத்திருந்த ரூ. 25 ஆயிரம் பணத்தையும் அவர்களிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    தலையாரி தாற்காலிக பணி நீக்கம்:

         முதுகுளத்தூர் வட்டம், கீழத்தூவல் குரூப் தலையாரியாக பணிபுரிந்து வந்தவர் சாமிநாதன். கீழத்தூவலில் 6 மரங்களை அரசு அனுமதியின்றி வெட்டி லாரியில் ஏற்றி விற்பனை செய்த செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த முத்துச்சாமி குறித்து முதுகுளத்தூர் வட்டாட்சியரிடம் தகவல் தெரிவிக்காததால், தலையாரி சாமிநாதனை மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் உத்தரவின்பேரில், வட்டாட்சியர் கே.கே. கோவிந்தன் தாற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai