சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

    By ராமநாதபுரம்  |   Published on : 16th July 2016 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விலைவாசி உயர்வு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கையை கண்டித்து, ராமநாதபுரம் அரண்மனை முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

       ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் திருப்புல்லாணி ஒன்றியச் செயலர் ஆர். மகாலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர். குருவேல், இ. கண்ணகி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் வட்டாரச் செயலர் ராஜ்குமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

       இதில், அனைத்துப் பொருள்களின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கும் பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிகளை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது, அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்குதல், உணவு தானிய முன்பேர வர்த்தகத்தை தடை செய்தல், உயிர் காக்கும் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai