சுடச்சுட

    

    ராமநாதபுரம் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்

    By ராமநாதபுரம்  |   Published on : 16th July 2016 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கட்சிக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால், அவர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்குவதாக, அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

       இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாகவும், கட்சிக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும் ராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் செயல்பட்டு வருவதாக தெரிய வருகிறது.

      தொடர்ந்து பலமுறை எச்சரித்தும் அவர்கள் தங்களது செயல்பாடுகளை திருத்திக் கொள்ளாததால், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களும், அவரவர் தற்போது வகிக்கும் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். விரைவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள்.

      ராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக சா. கதிரேசன் செயல்படுவார். அவர் தலைமையிலான குழுவினர், அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வார்கள். அவருக்கு கட்சித் தொண்டர்கள் முழுமையான ஒத்தழைப்பு நல்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai