சுடச்சுட

    

    விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: ராமநாதபுரம் சரக புதிய டி.ஐ.ஜி. பேட்டி

    By ராமநாதபுரம்  |   Published on : 16th July 2016 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மற்ற அரசுத் துறைகளின் ஒத்துழைப்புடன் விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட டி.ஐ.ஜி. கபில் சராட்கர் தெரிவித்துள்ளார்.

       இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளை முற்றிலும் குறைக்க மற்ற அரசுத் துறை அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

      மேலும், காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள், காவலர்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும். கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ராமநாதபுரம் மாவட்ட மக்களின் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும் என்றார்.

      மத்திய அரசுப் பணியிலிருந்து தமிழக காவல் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு, ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக  பதவி உயர்வு பெற்று முதன்முதலாக ராமநாதபுரத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட கபில் சராட்கருக்கு, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டம் சொந்த ஊராகும்.

      கடந்த 2002 இல் ஐ.பி.எஸ். படிப்பை முடித்து ஹைதராபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை நிறைவு செய்தார்முடித்தார். பின்னர், திருநெல்வேலி, மணியாச்சி ஆகிய இடங்களில் ஏ.எஸ்.பி.யாகவும், தஞ்சாவூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நீலகிரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் எஸ்.பி. யாகவும் பணியாற்றியுள்ளார்.

      சென்னையில் போக்குவரத்துப் பிரிவு மற்றும் மதுரையில் குற்றப்பிரிவு எஸ்.பி.யாகவும் பணியாற்றியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai