சுடச்சுட

  

  விரிவுரையாளர் பணிக்கு ஜூலை 30க்குள் விண்ணப்பிக்கலாம்: முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்

  By ராமநாதபுரம்  |   Published on : 16th July 2016 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனங்களில் உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஜூலை 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு, ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. ஜெயக்கண்ணு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

     செய்திக் குறிப்பு விவரம்: ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனங்களில் உள்ள முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர் மற்றும் இளநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்துக்கான போட்டி எழுத்துத் தேர்வு விண்ணப்பங்கள், ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஜூலை 15 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இப்போட்டி எழுத்துத் தேர்வு, சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ளது. ரூ. 50 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 30 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சென்னை, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பக் கூடாது. இதற்கான போட்டி எழுத்துத் தேர்வு 17.9.2016 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai