சுடச்சுட

    

    ஆடி மாதப் பிறப்பு: ராமேசுவரம் திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

    By ராமேசுவரம்,  |   Published on : 17th July 2016 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடித் திருநாளை முன்னிட்டு, சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    ஆடித் திருநாளை முன்னிட்டு, அதிகாலை 3.30 மணிக்கு திருக்கோயிலில் நடைகள் திறக்கப்பட்டன. பின்னர், 4 முதல் 6 மணி வரை சுவாமி சன்னதியில் ஸ்படிக லிங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

    உள்ளூர், வெளியூர் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோயில் பிரகாரத்தில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai