சுடச்சுட

    

    ஏழைகளிடம் அதிகாரிகள் அன்பாக நடந்து கொள்ளவேண்டும்:அமைச்சர் பேச்சு

    By ராமநாதபுரம்  |   Published on : 17th July 2016 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிகாரிகள் ஏழைகளுக்கு மரியாதை கொடுத்து அன்பாக நடந்து கொள்ளவேண்டும் என, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் முரு.மணிகண்டன் தெரிவித்தார்.

    ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஆட்சியர் எஸ். நடராஜன் தலைமையில் நடைபெற்றது. விழாவில், 1,152 பயனாளிகளுக்கு ரூ. 61 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பேசியதாவது:

    கிராமத்துக்குச் சென்று மக்களை நேரில் சந்தித்து தேவையான உதவிகளை செய்யவேண்டும். அப்போதுதான், கிராமம் வளர்ச்சியடையும். ஏழைகளுக்கு உதவி செய்தால் மட்டுமே வாழ்க்கையில் உயர்வான நிலைக்கு வர முடியும். மாதம் ரூ. 5 லட்சம் வரை சம்பாதித்துக் கொண்டிருந்த என்னை, மருத்துவப் பணி போதும் மக்கள் பணி செய் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதால், மக்கள் பணி ஆற்றுவதற்காக அமைச்சராக ஆக்கப்பட்டேன்.

    அதிகாரிகள் கவனமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு அரசுக்கு நற்பெயர் எடுத்துத் தரவேண்டும். தேடி வரும் மக்களுக்கு அதிகாரிகள் மரியாதை கொடுத்து அன்பாக நடந்து கொள்ளவேண்டும் என்றார்.

    விழாவுக்கு, எம்.எல்.ஏ.க்கள் எஸ். முத்தையா, எஸ். கருணாஸ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் மு. சுந்தரபாண்டியன், பரமக்குடி நகர்மன்ற உறுப்பினர் எம்.ஏ. முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அதிகாரி மு. அலிஅக்பர் வரவேற்றார்.

    இதில், மண்டபம் ஒன்றியக் குழுத் தலைவர் ஜி. முனியசாமி, ராம்கோ துணைத் தலைவர் தஞ்சி. சுரேஷ், மாவட்டத் திட்டக்குழு உறுப்பினர் கே.சி. வரதன் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai