சுடச்சுட

  

  தங்கச்சிமடம் தூய சந்தியாகப்பர் தேவாலய திருவிழா:கொடியேற்றத்துடன் தொடக்கம்

  By ராமேசுவரம்  |   Published on : 17th July 2016 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமேசுவரம் அருகே உள்ள தூய சந்தியாகப்பர் தேவாலயத் திருவிழா சனிக்கிழமை மாலை கொடியேற்றுத்துடன் தொடங்கியது.

  தங்கச்சிமடம் பகுதியில் உள்ள 474 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான தூய சந்தியாகப்பர் தேவாலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும்.

  இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு, தேவாலய வளாகத்தில் உள்ள கொடிக்கம்பம் முன்பு தூய சந்தியாகப்பர் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடிக்கு, சிவகங்கை மறைமாவட்டத் தலைமைச் செயலர் சேவியர் ஜெயசிங் சிறப்பு பூஜை செய்து, கொடியேற்றி வைத்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.

  தொடர்ந்து, தேவாலய பங்குதந்தை ராஜஜெகன், பாம்பன் பங்குதந்தை பிரிட்டோ ஜெயபாலன், உதயம் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் பாதிரியார் எழில்அரசு ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனையும் நடைபெற்றன. கொடியேற்ற நிகழ்ச்சியில், தங்கச்சிமடம் ஊராட்சி மன்றத் தலைவர் ஞானசீலன், தங்கச்சிமடம் ஜமாஅத் தலைவர் பசீர், தங்கச்சிமடம் யாதவர் சங்கத் தலைவர் கோவிந்தன், விழாக் குழுத் தலைவர் அந்தோணிராஜ் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai