Enable Javscript for better performance
தொண்டியில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை தாலுகா, தொண்டியில் பாவோடி மைதானத்தில் மத்திய அரசைக் கண்டித்து தமுமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது மத்திய அரசு வழக்கு போடவுள்ளதை கண்டித்து தமுமுக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் துணைச் செயலர் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சாதிக்பாட்ஷா, ஒன்றியச் செயலர் சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நம்புதாளை, தேவிபட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai